இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பு
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையினால் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எந்த பதவியில் இருந்தாலும் மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டவர் இவ்வாறு கூறியுள்ளார்.
டொலரின் பெறுமதி வீழ்ச்சி
ரூபாயின் மதிப்பு வலுவிழந்தால் ஏற்படும் பொருளாதாரப் பின்னடைவின் பாதகத்தை மக்கள் நேரடியாகச் சுமக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக சில யோசனைகளை மறுபரிசீலனை செய்து மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆனால் எதிர்காலத்தில் ரூபாயின் பெறுமதி எந்தளவுக்கு வீழ்ச்சியடையும் என்பதில் சந்தேகம் இருக்க வேண்டியதில்லை.
தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்திற்கு சிறந்த விடயங்களை பயன்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
கடினமான காலப்பகுதி
நாட்டின் மிகக் கடினமான காலகட்டம் அடுத்த சில மாதங்களுக்குள் தளர்த்தப்படும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடு எதிர்நோக்கும் சர்வதேச கடன் பிரச்சினையில் இருந்து மீள முழு நாடும் பெரும் முயற்சி எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.