கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலை - 6 பொலிஸார் காயம் - பெண் உட்பட பலர் கைது (Video)
கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
This is brutal. People are in these queues for days with no food and sleep. @SL_PoliceMedia has no right to physically harm citizens. This has been happening through out #SriLanka for the past few days. Understand the people and the problems there facing. #PoliceBrutality #lka pic.twitter.com/g6NNiXswKN
— Chamith Wijesundera (@chamithwije) June 18, 2022
6 பொலிஸார் காயம்
இதன்போது, 6 பொலிஸார் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து போயிருந்த போதும், வரிசையில் காத்திருந்த மக்கள் எரிபொருள் கேட்டு குழப்பத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
சம்பவத்தில் காயமடைந்த ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டில் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
பல நாட்களாக கூட வரிசையில் காத்திருந்தும் எரிபொருள் கிடைக்கப் பெறவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.