நெருக்கடியில் இலங்கை! மகிந்த - ரணில் மற்றும் கோட்டாபயவை களத்தில் உள்வாங்க அறிவுரை
நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த, கோட்டாபய, ரணில் ஆகியோரை உள்வாங்கி சர்வ கட்சி மாநாடொன்று உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்று திஸ்ஸகுட்டியாரச்சி வலியுறுத்தியுள்ளார்.
ஊடக சந்திப்பொனறில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டியாரச்சி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளை நாடுங்கள்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. நாடு மீண்டும் ஒரு சிக்கலான நிலைமைக்குத் தள்ளப்படும் அபாயம் எழுந்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன் ஒரு சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு சரியான நேரம் வந்துவிட்டது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 'பெரிய தலை ஆனால் சிறிய மூளை கொண்ட ஒரு குழந்தையைப்போன்றவர்' என்றும் திஸ்ஸகுட்டியாரச்சி சஜித் பிரேமதாசவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.