நான் பொறுப்பேற்றிருக்காவிட்டால் நாட்டின் நிலை என்னவாகியிருக்கும்..!! ரணிலின் கேள்வி
நான் பொறுப்பேற்றிருக்காவிட்டால் நாட்டின் நிலை என்னவாகியிருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கேள்வி எழுப்பினார்
மட்டக்களப்பில்(Batticaloa) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நிலை என்னவாகியிருக்கும்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அனைவரும் தப்பியோடும் வேளையிலும் நான் நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டேன். சுய நம்பிக்கை இருந்தால் எவரும் சவால்களுக்கு அஞ்ச வேண்டியிருக்காது.

ஓடுவதற்காக பயன்படுத்தும் சப்பாத்துக்களை, சவால்களை கண்டு அஞ்சி ஓடுவதற்காக பயன்படுத்தக்கூடாது. நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கையில் ஏற்றுக்கொண்டேன். நான் பொறுப்பேற்றிருக்காவிட்டால் நாட்டின் நிலை என்னவாகியிருக்கும்? இங்கு இவ்வாறு அமர்ந்து பேசக்கூட சந்தர்ப்பம் இருந்திருக்காது.
சவால்களை கண்டு அஞ்சக்கூடாது. ஒருபோதும் ஓடி ஒளியவும் கூடாது. ரோயல் கல்லூரியை போலவே பல பாடசாலைகளின் வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. அரசாங்கத்தினால் சிறந்த கல்வியை வழங்க முடியும். ஆனால் முதுகெலும்பை தர முடியாது. அது தம்மிடம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam