பணத்தை அச்சிட முடியாத நிலை! ரணில் திட்டவட்டம்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis IMF Sri Lanka Economy of Sri Lanka Money
By Benat May 13, 2024 01:56 PM GMT
Report

தற்பொழுது பணத்தை அச்சிட முடியாது. பணத்தை அச்சிட மாட்டோம் என்று சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அப்படியானால் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe)  தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மூதூரில் நள்ளிரவில் பொலிஸாரால் உடுத்த உடுப்புடன் இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள்! பகிரங்க எச்சரிக்கை

மூதூரில் நள்ளிரவில் பொலிஸாரால் உடுத்த உடுப்புடன் இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள்! பகிரங்க எச்சரிக்கை

வீழ்ச்சியடைந்த பொருளாதாரம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டோம். இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில் தான் தொடங்கியது.

பணத்தை அச்சிட முடியாத நிலை! ரணில் திட்டவட்டம் | Sri Lanka Economic Crisis

2020ல் இருந்து மூன்றரை வருடங்கள் இந்த நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோயால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

மேலும் நாட்டில் போசாக்குக் குறைபாடு அதிகரிப்பது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என்பன சில குழந்தைகளின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இந்த நிலை எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

எனவே, இந்நிலையைக் கட்டுப்படுத்த நிதி ஒதுக்க வேண்டியதாயிற்று. அதற்காக உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமுர்தியை விட மூன்று மடங்கு நிவாரணத்தை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தோம்.

மேலும், பயனாளிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தில் இருந்து 24 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்களின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக தனியார் துறையிலும் தோட்டத் துறையிலும் சம்பளத்தை உயர்த்துவதற்கான சமிக்ஞை கிடைத்துள்ளது.

தற்பொழுது பணத்தை அச்சிட முடியாது. பணத்தை அச்சிட மாட்டோம் என்று சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அப்படியானால் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி.

எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் தற்போது பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து வருகின்றோம். அடுத்ததாக தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

பணத்தை அச்சிட முடியாத நிலை! ரணில் திட்டவட்டம் | Sri Lanka Economic Crisis

அதன்படி, இந்த ஆண்டு வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக விடுபடுவோம். ஆனால் இந்தப் பொருளாதாரப் பிரச்சினை இத்துடன் முடிவடையாது. கடன் தள்ளுபடி செய்தாலும் மிகுதியை மீளச் செலுத்த வேண்டும்.

எனவே, நமது பொருளாதாரத்தை மாற்றுவதற்காக உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு பதிலாக, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும். அந்த நிபந்தனைகளுக்கு நாங்கள் சம்மதித்துள்ளோம்.

அதிலிருந்து நாம் விலகிச் செல்ல முடியாது. அதிலிருந்து விலகினால், இந்த சலுகைகளை இழக்க நேரிடும். எனவே இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

உயர்கிறது அமெரிக்க டொலர்

உயர்கிறது அமெரிக்க டொலர்

இலங்கை அரசின் ஒருநாள் வருமானம் 842 கோடி ரூபா

இலங்கை அரசின் ஒருநாள் வருமானம் 842 கோடி ரூபா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US