டொலர்களையும் ரூபாக்களையும் நாட்டுக்கு கொண்டு வரும் திட்டம் சஜித்திடம்
நாட்டுக்கு தேவையான டொலர்கள் மற்றுமு் ரூபாக்களை ஈட்டும் வழிமுறைதான் என்னிடம் இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஏனைய தலைவர்களுடன் ஒப்பிடும் போது எனக்கு பொய்யான பேச்சும், முகஸ்துதியும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு நாடாக நாம் 90 பில்லியன் டொலர் கடன் பட்டுள்ளோம். இந்தக் கடனில் இருந்து விடுபட ஏற்றுமதி சார்ந்த அபிவிருத்தி அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இது தேர்தல் வருடம்
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதிக்கு பிடிக்காவிட்டாலும் இது தேர்தல் வருடமாகும். ஜனாதிபதி தேர்தலை நடத்த தற்போதைய ஜனாதிபதிக்கு விரும்பவில்லை என்றாலும், இது தேர்தல் வருடம்.
இங்கு மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். மக்கள் இவ்வாறு சரியான தீர்மானம் எடுத்தால் நாட்டை சரியான பாதைக்கு இட்டுச் செல்ல முடியும்.
இடதுசாரியோ, வலதுசாரியோ, நாட்டுக்கு டொலர்களே தேவை. இடதுசாரியாக இருந்தாலும் சரி, வலதுசாரியாக இருந்தாலும் சரி எந்த கட்சிக்கு டொலரையும் ரூபாவையும் ஈட்ட முடியாதோ, அந்த கட்சி பயனற்றது.
அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பெருமளவு பணத்தை ஏமாற்றி திருடியுள்ளனர். வங்குரோத்தான நாட்டில் உரத்தில் ஏமாற்றி திருடிய அரசாங்கமே நாட்டை ஆண்டு வருகிறது.
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்திற்குச் சென்று அவற்றை வெளிக்கொணர்ந்தது, இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளின் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், ஒரு குடும்பம் அதன் கௌரவத்தைப் பெற்று நாட்டை முழுமையாக எழுதி எடுத்துக் கொண்டவர்கள் போல பொருளாதார பயங்கரவாதத்தின் மூலம் நாட்டை வங்குரோத்தாக்கினர்.
நான் ராஜபக்சர்களுடன் டீல் போட்டதில்லை. டீல் போடப் போவதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |