18 மாதங்களுக்குள் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் சுமார் 18 மாங்களுக்குள் நாட்டை நாம் பொருளாதார மேம்பாட்டை நோக்கி முன்னேற்றியுள்ளோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டை பொறுப்பேற்கும் சவால்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டை பொறுப்பேற்கும் சவாலை எவரும் ஏற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்திலேயே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நாங்கள் நாட்டை பொறுப்பேற்றோம்.

நாட்டை நாங்கள் பொறுப்பேற்றிருக்காமல் விட்டிருந்தால், லிபியா போன்ற நிலைமைக்கு நாடு செல்ல இடமிருந்தது.
சுமார் நானூற்று ஐம்பது வருடங்களாக ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்திருந்த எமது நாடு, டி.எஸ்.சேனநாயக்கா உள்ளிட்ட தேசிய மதத் தலைவர்களுடன் உயிர் தியாகம் செய்து, முன்னெடுத்த போராட்டத்தாலே சுதந்திர தேசமாக மாறியது.
நாடு சுதந்திரமடைந்து 76 வருடங்கள் கடந்துள்ளன. கடந்த நான்கு வருட காலத்துக்குள் கொவிட் தொற்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினை போன்ற விடயங்கள் காரணங்களால், அராஜக நிலைக்கு நாடு சென்றது.

இந்நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை.75ஆவது சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்படும்போது, மிகவும் துரதிஷ்ட நிலையிலே நாடு இருந்தது.
நாட்டை பொறுப்பேற்கும் சவாலை யாரும் ஏற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்திலேயே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நாங்கள் நாட்டை பொறுப்பேற்றோம்.
தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் சுமார் 18 மாதங்களுக்குள் பொருளாதார மேம்பாட்டை நோக்கி முன்னேறியுள்ளோம்.
76ஆவது சுதந்திர தினத்துடன் ஆரம்பிக்கும் இந்த வருடத்துக்குள், மக்களின் கஷ்டங்கள் நீங்கக்கூடிய, செளபாக்கியம் கிடைகுக்கும் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri