கோட்டாபயவின் வெளியேற்றம் : புதிய அரசாங்கத்தால் நேர்ந்த நிலை என்ன..
அரசாங்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வீட்டில் இருந்து பணத்தை கொண்டு வருமா என முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கோட்டாபயவின் வெளியேற்றம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னர் கடைக்குச் சென்றால் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும், மக்கள் அதை வெறுக்கிறார்கள். அந்த வெறுப்பின் விளைவாகவே ஜனாதிபதி கோட்டாபய வெளியேற வேண்டியதாயிற்று.

அவர் முன்னெடுத்த வேலைத்திட்டம் வெற்றி பெற்றிருந்தால் நாம் இன்னும் முன்னேறியிருக்கலாம். ஆனால் மக்களின் உடனடி எதிர்வினையால் அவர் செல்ல வேண்டியதாயிற்று.
இப்போது என்ன நடந்தது? இந்த அரசு சரியில்லை என்று வேறு ஒரு அரசை கொண்டு வந்ததன் விளைவு என்ன? ஏனெனில் வரும் அரசாங்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வீட்டில் இருந்து பணத்தை கொண்டு வருமா?
யார் வந்தாலும் இந்தப் பயணம்தான் செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan