ஜனாதிபதி ரணிலுக்கு வழங்கப்பட வேண்டிய சந்தர்ப்பம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
இந்த நாட்டை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கொண்டு வர ஜனாதிபதி ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார சவால்களை எதிர்கொண்ட தலைவர்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது சில நடைமுறை விடயங்களை கூறினார். தற்போதைய ஜனாதிபதி மிகவும் பொருளாதார சவால்களை எதிர்கொண்ட தலைவர்.
இந்த நாட்டை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கொண்டு வர அவருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
மேலும், போராடி மக்களைக் கோபப்படுத்தி வெறுப்புப் பேச்சுக்களை பரப்பும் மக்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக மக்கள் கிராம மட்டத்தில் எழுந்து நிற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.