பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல்! பொலிஸாரிடம் முறையிடுங்கள்
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை தவிர ஒரு சதம் கூட பொதுமக்கள் அதிகமாக செலுத்த வேண்டாம். அதிக விலை கேட்டால் பொலிசாரிடமோ நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடமோ முறைப்பாடு செய்யுங்கள் என்று அரலிய அரிசி உற்பத்தி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிகளவான அரிசியை கொள்வனவு செய்யும் மக்கள்
பொதுமக்கள் வழமையை விட அதிகமாக அரிசியை விலைக்கு வாங்குகிறார்கள். 10 கிலோ அரிசியை வாங்கியவர்கள் தற்போது 50 கிலோ வாங்குகிறார்கள். இவ்வாறு அதிக கேள்வி ஏற்படும் போது விநியோகம் குறைந்து விலை அதிகரிக்கக் கூடும்.
அரிசி விலை மாத்திரமல்ல, ஏனைய எல்லாப் பொருட்களும் விலை அதிகரித்ததற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேரும் பொறுப்புக் கூற வேண்டும். அரிசி விலை அல்லது பொருட்களின் விலையேற்றம் பற்றி நாட்டை ஆட்சி செய்த, செய்கின்றவர்கள் தனிப் பொறுப்பு கூறவேண்டும். நாமா அதற்கு பொறுப்பு கூறுவது? நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காணவே மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றார்கள்.
அநேகமானவர்களுக்கு தெரியாத உண்மை இதுதான். விவசாயிக்கு அடுத்ததாக கிராமத்தில் நெல் முதலாளி இருக்கின்றார். தரகர் இருக்கின்றார். ஆலை இல்லாமல் நெல்லை வாங்குபவர்கள் இருக்கின்றார்கள். சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள் இருக்கின்றார்கள்.
மொத்த அரிசி விற்பனை வர்த்தகர்கள் இருக்கின்றார்கள். இறுதியாகத்தான் சில்லறை வர்த்தகர்களிடம் செல்கின்றது. அதாவது இலாபமானது 7 பேர்களுக்கிடையே பிரிந்து செல்கிறது. ஆனால் இந்த ஏழு பேரினதும் இலாபத்தை அரிசி ஆலை உரிமையாளர் பெறுவது போன்றே சமூகம் காண்கின்றது.
மைத்திரியால் எனக்கு நன்மை இல்லை
எனது மூத்த சகோதரர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் எனக்கு பெரும் இலாபம் கிடைத்ததாக கேள்வி எழுப்பப்பட்டது. எனினும், எனக்கு பெரும் நஷ்டமே ஏற்பட்டது.
நான் சுய முயற்சியால் முன்னுக்கு வந்தவன். அவரின் அரசியல் பின்னணியை பிடித்துக் கொண்டு என் மீது சேறு பூசுகிறார்கள். இன்றும் அதுதான் நடக்கிறது.
இன்று நாட்டில் பெரும்பான்மையானோர் மைத்திரிபால சிறிசேன மற்றும் டட்லி சிறிசேன இருவரும் வெவ்வேறான பாத்திரங்கள் என அறிவார்கள்.
அதனை புரியாத ஒரு சிலரும் இருக்கின்றார்கள். 'விவசாயிக்கு அடுத்ததாக கிராமத்தில் நெல் முதலாளி இருக்கின்றார், தரகர் இருக்கின்றார், ஆலை இல்லாமல் நெல்லை வாங்குபவர்கள் இருக்கின்றார்கள், சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள் இருக்கின்றார்கள், மொத்த அரிசி விற்பனை வர்த்தகர்கள் இருக்கின்றார்கள்.
இறுதியாகத்தான் சில்லறை வர்த்தகர்களிடம் செல்கின்றது. அதாவது 7 பேர்களைக் கடந்து செல்கிறது' 'அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை தவிர ஒரு சதம் கூட அதிகமாக செலுத்த வேண்டாம். அதிக விலை கேட்டால் பொலிசாரிடமோ நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடமோ முறையிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.