கோட்டாபயவின் பதவியைப் பறிப்பதில் முக்கிய நகர்வு! கொழும்புக்கு அழைக்கப்படும் விசேட அணிகள் (VIDEO)
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வரும் பட்சத்தில் அரசாங்கத்தின் ஊழல்களை ஜே.வி.பி கையில் எடுக்கும் என அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய விடயங்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
மகிந்தன் கம்பனி 70 ஆண்டுகள் சிங்கள மக்களை முட்டாள்களாக்கிய மனித குலத்திற்கே அபகீர்த்தியான ஆட்சி என்பதை சிங்கள மக்கள் புரிந்துக்கொண்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மனித குலத்திற்கு எதிரான ஆட்சியை களைத்து இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை சிங்கள மக்கள் ஓயமாட்டார்கள்.நரபலி கொடுக்க வேண்டுமென்றாலும், அதனை கொடுக்க ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.
தற்போது கொழும்பில் இடம்பெறும் போராட்டத்தை வடக்கு,கிழக்கில் முன்னெடுத்திருந்தால் பாரபட்சமின்றி சுட்டுக்கொன்று இருப்பார்கள்.இதனை சிங்கள மக்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.