பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு
பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு புதிய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான தவணை விடுமுறைகளை வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
விடுமுறையின்றி தொடரும் கல்வி நடவடிக்கை
குறித்த காலப்பகுதியில் விடுமுறையின்றி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைகள் நடைபெறும் நாட்களில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கல்வி அதிகாரிகளுடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் அவதானம்
இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தைகளுக்கு போசாக்கான உணவுகள் கிடைக்காமை தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் உணவை தொடர்ந்து வழங்குவதற்கு நிதி உதவி பெறுவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சேவ் த சில்ட்ரன் நிறுவனத்துடன் ஏற்கனவே கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri
