முதலில் பொதுத் தேர்தல் : ஏற்பட உள்ள பாரிய சிக்கல் நிலை
நாட்டின் தற்போதைய நிலையில் பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன(Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் கோரிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபர் காலப்பகுதிக்குள் நடத்த வேண்டும். அதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும்.
என்றாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் கோரி வருகின்றன.
ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் பொதுத தேர்தல் இடம்பெற்றால் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துவரும் அனைத்து வேலைத்திட்டங்களும் தடைப்படும். நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் மீண்டும் பின்தள்ளப்படும்.
அதனால் ஆரம்பமாக ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு, ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) நிச்சயமாக அதில் வெற்றிபெறுவார். அதன் பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு சென்றால் நிலையான ஆட்சி ஒன்றை நாட்டில் ஏற்படுத்தலாம்.
மேலும் ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் பிரதமராக இருந்தே குறுகிய அதிகாரங்களுடன் நாட்டின் அபிவிருத்திக்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |