ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு : அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்
இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) விடுத்துள்ள அறிவிப்பால் பல அரசியல்வாதிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமாகும். எனவே அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் உள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நேரம் நிதியளிப்புச் செயற்பாட்டின் பின்னரே வருகின்றது. எனவே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தாது.
பொதுத் தேர்தல்
அதற்கேற்ப தேர்தல் வரைபடத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்பதை இது தெளிவாகக் காட்டுவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
முதலில் பொதுத் தேர்தலை நடத்துமாறு அனைத்து கட்சிகளும் ஜனாதிபதியிடம் கோரி வருகின்றன. எனினும் அது குறித்து ரணில் இணக்கம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பொதுத் தேர்தல் தற்போது இல்லையென்ற ஜனாதிபதியின் அறிவிப்பு அரசியல்வாதிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 10 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam
