இலங்கை மக்களின் திகிலூட்டும் பயணம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாட்டால் பலரின் தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளதோடு, வாழ்வாதாரத்தை இழக்கும் இக்கட்டான நிலையையும் சந்தித்துள்ளனர்.
இலங்கையர்களின் திகிலூட்டும் பயணம்
தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் கடுமையான போக்குவரத்து நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் முழுமையாகச் செயற்படாததால், குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
அதிகமான பயணிகள் அவற்றில் பயணம் செய்கின்றனர்.
இந்த நிலையில் இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் பேருந்து ஒன்றின் கூரையில் பயணிகள் பயணம் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இது அப்பகுதியில் மிகவும் செங்குத்தான சரிவுகளைக் கொண்ட பகுதியாகும் என கூறப்படுகின்றது.
மிகவும், ஆபத்தான நிலையில் இவ்வாறான பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் இலங்கை முழுதும் காணப்படுகின்றனர்.