இலங்கையில் மேலும் பல நிலநடுக்கங்கள் பதிவாகலாம்! எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ள பேராசிரியர்
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இதுவரை நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்படாத பகுதிகளில் விரைவில் நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்பட வேண்டும் என புவியியல் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன கூறியுள்ளார்.
இலங்கையில் மேலும் நிலநடுக்கம் ஏற்படும் போக்கு காணப்படுவதால், நிலநடுக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், நிலநடுக்கமானிகளை நிறுவுவது மட்டுமல்லாமல், இந்த நாட்டில் நிலநடுக்கம் குறித்த தரவுகளை சேகரிக்கத் தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை மண்ணின் ஈர்ப்பு விசை
நாட்டில் பல இடங்களில் அதிர்வு மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகளில் அதிர்வு மீட்டர்கள் பொருத்தப்படவில்லை எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, 1966 ஆம் ஆண்டு 'ஹண்டர் சர்வேயர் நிறுவனம்' இலங்கை மண்ணின் ஈர்ப்பு விசையை வரைபடமாக்கிய போது, கொழும்பில் இருந்து நாட்டின் உட்பகுதி வரை அசாதாரண குணாதிசயங்களைக் கொண்ட கோடு ஒன்று அடையாளம் காணப்பட்டதாகவும், அது என்ன என்பதை செயற்கைக்கோள்கள் அடையாளம் காணவில்லை என்றும் சேனாரத்ன கூறியுள்ளார்.
மேலும் இதுபோன்ற விடயங்களை மையமாக வைத்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
