மருந்து பற்றாக்குறையால் அபாயக் கட்டத்தை எதிர்நோக்கும் இலங்கை: மருத்துவர்கள் எச்சரிக்கை
நாட்டின் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையால் அபாயக் கட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய தினம் (26.05.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வலி நிவாரணிகள், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோயாளிகளுக்கான மருந்துகள் உட்பட 120க்கும் அதிகமான மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்துகளுக்கு தீவிர பற்றாக்குறை
தனியார் மருந்தகங்களில் ஔடதங்கள் அதிக விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மருந்துகளுக்குத் தீவிர பற்றாக்குறை நிலவுவதுடன், அரசாங்கம் தீவிரமான நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
அரசாங்கத்திற்கு மருந்துப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் செயல்முறைகளும் பல காரணங்களால் தடைப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |