இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த குடும்பத்திற்கு தமிழகத்தில் வியப்பை ஏற்படுத்திய சம்பவம்(Video)
உள்நாட்டு போர் காரணமாக இலங்கையிலிருந்து பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் இந்தியா, அமெரிக்கா, லண்டன் மற்றும் பிரான்ஸ் பேன்ற பல நாடுகளில் வசிக்கின்றனர்.
உள்நாட்டு போர் காரணமாக பலர் இடம்பெயர்ந்து சென்ற கால கட்டங்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் ஒரு பாடகராக வேண்டும் என்ற கனவோடு இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளார்.
கனவுக்காக இந்தியா சென்றார்
1985 ஆம் ஆண்டுகளில் பலர் உள்நாட்டு யுத்தத்தில் இருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள, புலம்பெயர்ந்த வேளையில் தனது கனவுக்காக குடும்பத்தை விட்டு வேறு எங்கும் செல்லாமல் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
பல முயற்சிகள் செய்தும் அவரால் ஒரு பாடகராக முடியவில்லை. இருப்பினும் தனது நம்பிக்கையை கைவிடாமல் இலங்கையில் அவரது குடும்பம் செய்த இரும்பு பட்டறை தொழிலை இந்தியாவில் செய்ய ஆரம்பித்துள்ளார்.
இவரது தொழில் திறமைக்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களும் அவரது கடைக்கு சென்றுள்ளார். இவ்வாறு கடைக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் இவர் சிறந்த பாடகர் என்பதை அறிந்து அவரை பாட சொல்லி கேட்பதும் வழமையான விடயமாகும்.
தாய் தந்தையை இழந்த இவருக்கு 13 சகோதரர்கள் இருப்பதுடன் அவர்களும் அவர்களது பிள்ளைகளும் இலங்கை உட்பட பல நாடுகளில் வசிப்பதாக தெரிவித்துள்ளார்.
இவரது உறவுகள் யாழ்ப்பாணத்தில் நைனாதீவு, சுன்னாகம் போன்ற பல இடங்களில் வசிப்பதாக அவர் கூறியுள்ளார்.
புத்துயிர் பெற்ற குடும்பம்
இந்நிலையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்து தமது உறவுகளை பிரிந்து இருந்த அவரை இந்திய ஊடகம் ஒன்று தமது நிகழ்ச்சிக்காக நேர்காணல் கண்டுள்ளது.
இதனூடாக அவரது கடந்த காலங்களும் அவர் அனுபவித்த பல துன்பங்களும் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் அவரை பல காலமாக தேடிக்கொண்டிருந்த அவரது உறவுகள் குறித்து நிகழ்ச்சி தொடர்பான காணொளி ஊடாக அவர் இருக்கும் இடத்தை அறிந்து அவரை தேடி சென்று நேரில் பார்த்துள்ளனர்.
இதன்போது சோமசுந்தரத்தின் அண்ணன் மகனும் அவருடைய மகளும் அவரை தேடி நேரில் சென்றுள்ளனர். அவர்களை பார்த்து மகிழ்ந்த சோமசுந்தரம் பல வருட கதைகளை கதைத்து மகிழ்ந்ததுடன் அவருடைய கனவுகள் தொடர்பாகவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பிரான்சுக்கு அழைத்து செல்ல முடியாது
சோமசுந்தரத்தின் மகன் உரையாற்றுகையில், யுத்தத்தில் இடம்பெயர்ந்து வந்த பின்னர் பல உறவுகள் பல நாடுகளில் வாழ்கின்றனர். எனது சித்தப்பா இந்தியாவிற்கு பாடகராக வேண்டும் என்று இடம்பெயர்ந்து வந்துள்ளார்.
அவர் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது இசை குழுவொன்றில் இணைந்து பல மேடைகளில் பாடல்களை பாடியுள்ளார்.
தற்போதும் எமது உறவுகள் இலங்கையில் உள்ளனர். இவரை பல வருடங்களாக தேடிக்கொண்டிருந்தோம். எனது தந்தை இவரை பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்.
இவரை இப்போது பிரான்சுக்கு அழைத்து செல்ல முடியாது. இலங்கைக்கு போவதற்கு அவர் விரும்பினால் அவரை நாங்கள் அனுப்பி வைப்போம் என கூறியுள்ளார்.
இதேவேளை அவரது பேத்தி கூறுகையில், நான் முதல் தடவையாக எனது அப்பப்பாவை பார்க்கின்றேன். அவர் நான்றாக பாடல் பாடுவார் என தெரியும்.
வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அவர் எங்களுடன் வருவார் என்றால் நாங்கள் அவரை கூட்டி செல்வோம் என கூறியுள்ளார்.
பல வருடங்களாக உறவுகளை பிரிந்த சோமசுந்தரம் மகனை பார்த்து மகிழ்ந்தார். ஆனால் அவர்களுடன் செல்வது தொடர்பில் எந்த முடிவையும் வெளிப்படுத்தவில்லை.
இவ்வாறு உள்நாட்டு யுத்தம் காரணமாக பல நாடுகளில் தமது உறவுகளை பிரிந்து வாழும் எத்தனையோ ஈழத் தமிழர்கள் இன்னும் இருக்க தான் செய்கின்றார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 19 மணி நேரம் முன்

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
