இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள 1955 வெளிநாட்டு பிரஜைகள்
கடந்த நான்கு வருடங்களில் 1,955 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் செயல்திறன் மீளாய்வு அறிக்கையின்படி, கடந்த 2018ஆம் ஆண்டு மற்றும் 2021ஆம் ஆண்டுக்கு இடையில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வெளிநாட்டு பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல்படி, 2018ஆம் ஆண்டில் 678 வெளிநாட்டவர்களும், கடந்த 2019ஆம் ஆண்டில் 898 பேரும், 2020ஆம் ஆண்டில் 249 பேரும், கடந்த ஆண்டு 130 வெளிநாட்டவர்களும் நாடு கடத்தப்பட்டனர்.
இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை
கடந்த ஆண்டு இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட 130 பேரில் 92 பேர்
இந்தியர்களாவர், ஒன்பது நேபாளியர்களும் ஏழு நைஜீரியர்களும், ஆறு
பாகிஸ்தானியர்களும், ஐந்து ரஷ்யர்களும், இரண்டு மாலைதீவியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.



