ஒரே நாளில் அதிக வருமானம் ஈட்டிய உயிரியல் பூங்காக்கள்!
உலக சிறுவர் தினத்தன்று நாட்டில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களும் இந்த ஆண்டு ஒரே நாளில் அதிக வருமானம் ஈட்டியுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் துறைசார் அமைச்சரான மஹிந்த அமரவீரவுக்கும் அறிவித்துள்ளது.
மொத்த வருமானம்

உலக சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் மொத்த வருமானம் ஐம்பது லட்சத்து எண்பத்தாயிரத்து முந்நூற்று எழுபத்தேழு (50,8377 ) ரூபா வருவாயை ஈட்டியுள்ளது.
பின்னவல அலு பாதுகாப்பு மையம் 947,000 ரூபாயும், பின்னவல மிருகக்காட்சிசாலை 949,200 ரூபாயும், ரிதியகம சஃபாரி பூங்கா 856,000 ரூபாயும் ஈட்டியுள்ளது.
இலவசமாக பார்வையிட அனுமதி

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, தேசிய விலங்கியல் துறை, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு உயிரியல் பூங்காவிற்குள் இலவசமாக செல்ல அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri