இந்திரா காந்தி கொலையை பொதுவெளியில் பெருமைப்படுத்திய சம்பவம்! கனடாவை கடுமையாக சாடும் இலங்கை
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையை பொதுவெளியில் பெருமைப்படுத்த அனுமதித்ததற்காக கனடாவை இலங்கை கடுமையாக சாடியுள்ளதுடன், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ட்வீட் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையை கனடாவில் உள்ள காலிஸ்தானிய தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் பகிரங்கமாக பெருமைப்படுத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையை மேம்படுத்துதல் என்ற பெயரில், எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் புகலிடங்களை வழங்க முடியாது.
காலிஸ்தானிய பிரிவினைவாதிகள்
பயங்கரவாதத்தை பெருமைப்படுத்த அனுமதிப்பதன் மூலம், மற்றொரு தலைமுறை இளைஞர்கள்
விரக்தியை நோக்கி தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
1984 ஒக்டோபர் 31ஆம் திகதி தமது சீக்கிய மெய்பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.
சீக்கிய பொற்கோயிலுக்குள் படைகளை அனுப்பியமைக்கு பழிவாங்கும் செயலாகவே இந்த கொலை கருதப்படுகிறது.
இந்தநிலையில் இதனை பெருமைப்படுத்தும் வகையிலேயே கனடாவில் காலிஸ்தானிய பிரிவினைவாதிகள், பொதுவெளியில் இந்திரா காந்தியின் உருவ பொம்மை மீது இரண்டு சீக்கிய மெய்காவலர்கள் துப்பாக்கி சூட்டை நடத்துவதை போன்ற உருவங்களை காட்சியப்படுத்தியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
