இந்திய உதவிகளுக்கு நன்றி தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி
இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இந்தியா உதவியதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் இடம்பெறும் ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்து கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் மீட்பு மற்றும் நிலைப்படுத்துதலின் மிகப்பெரிய பங்காளியாக இந்தியா உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, இலங்கைக்கு செய்த உதவிகளை ஏனைய எல்லா நாடுகளும் ஒன்றிணைந்துகூட செய்யவில்லை என தாம் நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய - இலங்கை தொடர்பு
இந்நிலையில் இந்தியா 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் வரியை இலங்கைக்கு வழங்கியது.
எனவே இலங்கை, இந்தியாவிற்கு மிகவும் நன்றியுள்ள நாடாக இருக்கின்றது என சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்போது நாடு இந்த மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதிய உதவித் திட்டத்தை
எதிர்பார்க்கின்றது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.