கொழும்பு முற்றுகைப் போராட்டம்! இரவிரவாக திரண்ட ஆயிரக் கணக்கான மாணவர்கள் - தீவிரமடையும் போராட்டம் (Video)

Colombo Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis Gota Go Home 2022 Sri Lankan political crisis
By S P Thas Jul 08, 2022 02:34 PM GMT
Report

புதிய இணைப்பு

கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தற்போது இரவிரவாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கில் மாணவர்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய இணைப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம் தற்போது தீவிர நிலையை அடைந்துள்ளது. 

இந்தநிலையில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இலங்கை வங்கி மாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதன்போது அதிளவான  மாணவர்கள் கடுமையான கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.


கொழும்பு முற்றுகைப் போராட்டம்! இரவிரவாக திரண்ட ஆயிரக் கணக்கான மாணவர்கள் - தீவிரமடையும் போராட்டம் (Video) | Sri Lanka Crisis Political Today Protest

முதலாம் இணைப்பு

சற்று முன்னர் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முற்றுகைப் போராட்டம்! இரவிரவாக திரண்ட ஆயிரக் கணக்கான மாணவர்கள் - தீவிரமடையும் போராட்டம் (Video) | Sri Lanka Crisis Political Today Protest

களனி பல்கலைக்கழகத்திற்கு வெளியே கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கோட்டை நோக்கி பேரணியை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொழும்பு முற்றுகைப் போராட்டம்! இரவிரவாக திரண்ட ஆயிரக் கணக்கான மாணவர்கள் - தீவிரமடையும் போராட்டம் (Video) | Sri Lanka Crisis Political Today Protest

இந்த நிலையில், மாணவர்கள் அங்கு இன்று இரவு தங்கியிருந்து நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு முற்றுகைப் போராட்டம்! இரவிரவாக திரண்ட ஆயிரக் கணக்கான மாணவர்கள் - தீவிரமடையும் போராட்டம் (Video) | Sri Lanka Crisis Political Today Protest

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களினால் நாடு முழுமையான முடங்கியுள்ள நிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என பல மாதங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை முழுவதும் வெடிக்கும் போராட்டம் 

எனினும் தான் தோல்வியுற்ற ஜனாதிபதியாக வெளியேற மாட்டேன் என்று அண்மையில் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். இந்நிலையில், நாளைய தினம் கொழும்பை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து தரப்பினரும் முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாளை இலங்கை முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடிக்கும் என முன்னதாக எச்சரிக்கைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதுவொருபுறமிருக்க, ஜனாதிபதி செயலகம் உட்பட பல இடங்களில் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தலைநகரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Gallery
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US