இலங்கை மக்கள் நடுங்கத் தொடங்கும் காலம் உருவாகிறது! சஜித் எச்சரிக்கை
போராட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பி வீட்டுக்குள் இருக்கின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது அரசு வன்முறையைப் பிரயோகித்து அவர்கள் மீது அடக்குமுறைகளை மேற்கொண்டு அவர்களைச் சிறைச்சாலைகளுக்குள் அடைத்து வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
"இருநூற்று இருபது இலட்சம் மக்கள் பாரிய துன்பங்களை எதிர்கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், அரசு அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு முண்டியடித்துக்கொண்டு இருக்கின்றது.
மக்களுக்கு நடுக்கம் ஏற்படும்

எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படும்போது நாட்டு மக்கள் நடுங்கத் தொடங்குவார்கள். மக்கள் ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். நாட்டில் தற்போது சந்தர்ப்பவாத அரசியலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியலில் ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ ஒருபோதும் பங்கேற்காது.
விலையேற்றம்

மத்திய வருமானம் கொண்ட நாடாகவே ஆரம்பத்தில் எமது நாட்டைக் கூறினர். தற்போது எமது நாடு குறைந்த வருமானம் பெறும் நாடுகளின் பட்டியலிலேயே இணைக்கப்பட்டுள்ளது.
பாணின் விலை 300 ரூபாவாக அதிகரித்துள்ளது. மின்கட்டணம், நீர்க்கட்டணம் என அனைத்துக் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. மண்ணெண்ணெய்யின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது."என கூறியுள்ளார்.
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri