ஆளுங்கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கு மீண்டும் இடமில்லை: சஜித் திட்டவட்டம்
ஆளுங்கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என்று சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
காலி, அக்மீமன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
ரஞ்சன் விடுதலை அப்பட்டமான நாடகம்
ஒருசிலர் ஐக்கிய மக்கள் சக்தியை விட்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் போது ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்விப்பதற்காகவே தாங்கள் கட்சி தாவியதாக தெரிவித்திருந்தனர்.
எனினும் ரஞ்சன் விடுதலை என்பது ஒரு அப்பட்டமான நாடகம். பெயரளவில் தான் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரால் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது.
கட்சி தாவியவர்கள்
அவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டிருந்தால் இன்று நாங்கள் தன்மானத்துடன் ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
ஐக்கிய மக்கள் சக்தியை விட்டும் கட்சி தாவியவர்களை மீண்டும் எந்தவொரு கட்டத்திலும் கட்சிக்குள் இணைத்துக் கொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளோம்.
அவர்கள் பணத்துக்காக கட்சி மாறக்கூடியவர்கள். அவர்களை மீண்டும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் இணைத்துக் கொள்ளவே மாட்டேன் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 32 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
