நபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த பெண்
ருவன்வெல்ல - தொரனுவ பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த நபர் ஒருவரை பெண் கொலை செய்துள்ளார்.
53 வயதுடைய பெண்ணொருவர் தனது கள்ள கணவன் எனக் கூறப்படும் 54 வயதுடைய நேற்று (05.07.2023) மாலை படுகொலை செய்துள்ளார்.
உயிரிழந்தவர் கொஸ்கம பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
பொலிஸாரால் கைது
சம்பவம் தொடர்பில் 53 வயதுடைய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை பெல்ட்டினால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண், திருமணமான கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், உயிரிழந்த நபருடன் சுமார் இரண்டு வருடங்களாக உறவை ஏற்படுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |