இலங்கையில் கணவனை கொலை செய்ய ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்த மனைவி
தனது கணவனை கொலை செய்வதற்காக ஒப்பந்தம் மேற்கொண்ட மனைவி உள்ளிட்ட நால்வரை ஆனமடுவ பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு, கொலை செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபாய்க்கு குறித்த பெண் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரான பெண் தனது கணவரின் நெருங்கிய நண்பருடன் தகாத உறவைப் பேணியிருந்தமை பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஆயுதங்கள் மீட்பு

இந்தச் சம்பவம் தொடர்பில், பெண்ணுடன் தகாத உறவை பேணியவர் என கூறப்படும் நண்பர் உட்பட மேலும் நால்வரை ஆனமடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவத்தின்போது வாள்வெட்டுக்கு இலக்கான கணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் கத்திகள் ஆறொன்றிலிருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri