மோசமான ஆட்டத்தால் ஓரங்கட்டப்பட்ட இலங்கை கிரிக்கட் அணி
தற்போது நடைபெற்று வரும் செம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள், இலங்கை பல தசாப்தங்களில், பங்கேற்காத முதல் ஐசிசி(ICC) போட்டியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐம்பது ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில், இலங்கை அணியின் மோசமான ஆட்டத்தால், 2025 செம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில், தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன.
கடந்த பத்தாண்டுகள்
2013இல் சிம்பாப்வேயில், இலங்கை அணி, ஒரு தகுதிச் சுற்றில் வென்ற போட்டியை தவிர, கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க எந்த போட்டியிலும் வெல்லவில்லை.
இருப்பினும், 1996 இல் 50 ஓவர் உலகக்கிண்ணம் மற்றும் 2014, 20க்கு 20 உலகக் கிண்ணம் உட்பட ஐசிசி போட்டிகளில் இலங்கை அணி கடந்த காலங்களில் சில பெரிய வெற்றிகளைப் பெற்றது.
மேலும், 2007, 2009, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்தநிலையில், இலங்கை அணி கட்டமைப்பு ரீதியாக பல சிக்கல்களை எதிர்கொள்கிறது.
சுவாரஸ்யமான புள்ளிவிபரங்கள்
இலங்கையில் நடந்து வரும் முதல் தர போட்டியின் மிகவும் சுவாரஸ்யமான புள்ளிவிபரங்களின்படி, முதல் 20 விக்கெட் வீழ்த்தியவர்கள் அனைவரும் சுழற்பந்து வீச்சாளர்களாகவே உள்ளனர்.
எனவே ஆட்டங்கள் நடைபெறும் களங்களில், ஏனைய அணிகளை காட்டிலும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன என்பதும் கட்டமைப்பு சிக்கலாக கருதப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |