மக்களை குழப்பும் தமிழ் அரசியல்வாதிகள்..!
தமிழ்தேசிய அரசியல்வாதிகளின் தற்போதைய செயற்பாடுகள் தமிழ் மக்களை குழப்பும் விதத்தில் உள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போது மக்கள் எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள். அநுர குமார திசாநாயக்கவோடும்(Anura Kumara Dissanayake) செல்பி எடுக்கிறார்கள், மன்னாரில் சஜித்துடனும் செல்பி எடுக்கிறார்கள்.
இவ்வாறான சூழ்நிலைகளின் போது இதனை பார்க்கும் சாமானிய மக்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றுதான் அவர்களும் ஒன்றுதான்.
இதற்கு முன்பிருந்த எமது தலைவர்கள் இவ்வாறு நடக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |