மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை நிதியுதவி
மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் மருத்துவமனை என்பவற்றுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை நிதியுதவி அளிக்க தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம் தலா ஒரு லட்சம் டொலர் வீதம் இரண்டு மருத்துவமனைகளுக்கும் இரண்டு இலட்சம் டொலர்கள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது. அதன் இலங்கைப் பெறுமதி 73 கோடி ரூபாவாகும்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் புற்று நோயாளிகள் மற்றும் சிறுவர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதற்கு வழி செய்வது அத்தியாவசியமாகும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை செயலாளர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் அரச மருந்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடுமையான தடடுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 12 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
