தொடர் சர்ச்சையில் சிக்கும் இலங்கை கிரிக்கெட் சபை! அரசியலில் எதிரொலிக்கும் அதிர்வலைகள் (Video)
அண்மைக்காலமாக இலங்கையின் கிரிக்கெட் சபை பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கை அணியின் தொடர் தோல்விகளும், வீரர்களின் நடவடிக்கைகளும் கூட சர்வதேசத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த சர்ச்சைகள் இலங்கை அரசியல் பரப்பிலும் கூட தாக்கத்தை செலுத்தியிருக்கின்றமை நாம் அறிந்ததே.
இதற்கு பிரதான காரணம், இலங்கை கிரிக்கெட் சபையும் அதற்குள்ளான அரசியலும் தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீதான கொலைக் குற்றச்சாட்டு : 16 வருடங்களின் பின்னர் விடுதலையான தமிழ் அரசியல் கைதிகள்(Video)
தேசியக் கொடிக்கும் பரிதாப நிலை
இலங்கை அணியின் தொடர் தோல்விக்கு காரணம் என்ன? என ஆராயச் சொன்னால் கிரிக்கெட் சபையை கலைப்பதிலும், அதன் ஊடான அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் எமது விளையாட்டுத் துறை கவனம் செலுத்தி வருகின்றது என்பது வருந்தத்தக்க உண்மை.
இது இவ்வாறு இருக்க, நேற்றையதினம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் பல சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்த நிலையில், அதனை அறிக்கையிடுவதற்காகச் சென்றிருந்து எமது குழுவினரின் கமராக்களில் அங்கு ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியின் பரிதாப நிலை பதிவானது.
விமர்சனமாக சொல்லப் போனால், இலங்கை கிரிக்கெட் சபையால் சர்வதேசத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு மாத்திரம் அல்ல இலங்கையின் தேசியக் கொடிக்கும் பரிதாப நிலையே ஏற்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை கோடிகளில் புரள்வதாக அண்மைய நாட்களில் அரசியல்வாதிகள் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். ஊழல் நிறைந்த ஒரு சபையாக இலங்கை கிரிக்கெட் சபை காணப்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், இப்படி செல்வ செழிப்பாக இருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை முற்றத்தில் ஏற்றப்பட்டிருக்கும் தேசியக் கொடி கிழிந்து, கந்தலாக காட்சியளிப்பது எமது நாட்டின் கிரிக்கெட் அணியின் நிலையை ஒரு வரியில் சொல்வது போல அமைந்துள்ளது.
மேலும், அரச வங்கியொன்றின் கணக்கிலிருந்து 2 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தற்போது முயற்சித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஒரு கருத்தினை முன்வைத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் ஊழல் நிறைந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. பல முறைப்பாடுகள், விமர்சனங்கள், சர்ச்சைகள் இவை அனைத்தையும் தாண்டி ஒரு தேசியக் கொடியை, நாட்டின் அடையாளத்தை முறையாக பேண முடியாத வறிய நிலையில் தான் இலங்கை கிரிக்கெட் சபை இருக்கின்றது என்பதை மனம் நொந்தேனும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |