கிரிக்கெட் அணி தலைவரை மாற்றிய சர்ச்சை
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்குமாறு எவ்வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐசிசி தடை விரைவில் நீக்கப்படும் இலங்கை அணி விளையாட அனுமதிக்கப்படும் என நம்புவதாகவும் மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (12.11.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அணியின் தலைவர் பதவி
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து போது தசுன் ஷானகக்கு உபாதை ஏற்பட்டது.
இதனால் அவருக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு வேண்டும் என மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது ஆகவே பதிலாக தசுன் ஷானகக்கு பதிலாக சாமிகாவை அழைத்து செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.
எனவே, தசுன் ஷானகவை நீக்குமாறு எவ்வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை உடல் உபாதை காரனமானவே அவர் நீக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிரிக்கெட்டின் ஐசிசி தடை விரைவில் நீக்கப்பட்டு எங்கள் அணி விளையாட அனுமதிக்கப்படும் என நம்புகிறோம் என்று இலங்கை அணியின் சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
உச்சகட்ட பதற்ற நிலையில் யுத்தகளம்.....! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்: ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |