இலங்கையில் நடைபெறவிருந்த உலகக் கோப்பை: தடையினால் பாதிக்கப்படுமா...!
ஐ.சி.சி, இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்காவிட்டால், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை நாடு இழக்க நேரிடும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா எச்சரித்துள்ளார்.
இது பற்றி ஷம்மி சில்வா மேலும் கூறுகையில்,
“ஏறத்தாழ, ஐந்து மாதங்களுக்கு முன்பு, இலங்கைக் கிரிக்கெட்டின் மீதான அரசியல் தலையீடுகள் பற்றிய தகவல் வெளியானபோது, ஐ.சி.சி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு விசாரணை நடத்தியுள்ளது.
ஐ.சி.சி துணைத் தலைவர்
இந்த அரசியல் தலையீடுகள் குறித்து, ஐ.சி.சி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா சிறப்புக் கவனம் செலுத்தியிருந்தார்.

கவாஜா, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து கிரிக்கெட்டின் மீதான அரசியல் தலையீடுகள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், ஐ.சி.சி தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எச்சரித்திருந்தார்.
ஐ.சி.சியின் தீர்மானங்கள்
மேலும், ஜூலை 10 முதல் 14 வரையான ஐ.சி.சி கூட்டத்திற்கு நான் சமூகமளித்திருந்தபோது, ஐ.சி.சியின் அறிக்கையில் இலங்கை கிரிக்கெட்டில் முற்றிலுமாக அரசியல் தலையீடு காணப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்காக இலங்கையில் கிரிக்கெட்டை தடைசெய்ய வேண்டும் அல்லது இலங்கைக்கான நிதி, முடக்கம் செய்யப்பட வேண்டும் என ஐ.சி.சி அப்போது கூறியிருந்தது.
எனினும் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக்கொண்டு அதை தடுத்தோம்.
அதேவேளை, இலங்கை கிரிக்கெட் மீதான தற்போதைய தடை நீக்கப்படாவிட்டால், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இலங்கையில் நடத்துவது குறித்து, நவம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் ஐ.சி.சியின் அடுத்த வாரியக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan