இலங்கையில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்
கம்பஹா மாவட்டத்தில் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த கினிகம பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும் எடரமுல்ல அக்பர்டவுன் பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய முதியவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அவசர நிலை
கோவிட் தொற்றினால் உயிரிழந்த கினிகம பிரதேசத்திலுள்ள வயோதிபப் பெண் கோவிட் எதிர்ப்புத் தடுப்பூசிகள் போடப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக மஹர சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோவிட்-19 தொற்று காரணமாக பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri