இலங்கையில் கோவிட் மரணங்கள் சடுதியாக உயர்வு!

Death Sri Lanka COVID-19
By Murali May 05, 2021 07:29 PM GMT
Report

இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய, கோவிட் தொற்று காரணமாக 51, 35, 66, 70, 82, 75, 42 மற்றும் 70 வயதுடைய 8 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, 76, 70, 55, 66, 67 மற்றும் 87 வயதுடைய 6 ஆண்களும் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் மேலும் 11 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!

இலங்கையில் கோவிட் 19 தொற்றால் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் பதிவாகியுள்ள கோவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது.

01. கோன்கஹவெல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 33 வயதுடைய ஆண் ஒருவர், மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 03 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். தீவிர கோவிட் நிமோனியா மற்றும் மோசமாக சிறுநீரகம் பாதிக்கபட்டமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

02. தியதலாவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய ஆண் ஒருவர், தியதலாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 03 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா, நுரையீரல் அழற்சி மற்றும் நுரையீரல் உட்புறக் கலங்கள் பாதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

03. மாலபே பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 94 வயதுடைய பெண் ஒருவர், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2021 மே 03 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா, இதயநோய் மற்றும் உயர் குருதியழுத்த நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

04. மஹரகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 62 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2021 மே 03 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா, நாட்பட்ட ஈரல் நோய், நீரிழிவு மற்றும் மூச்சிழுப்பு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

05. அரநாயக்க பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய ஆண் ஒருவர், அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் மாவனெல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 03 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார் கோவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்காளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

06. வல்கம்முல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 04 ஆம் திகதி அன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

07. வேயங்கொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய பெண் ஒருவர், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 04 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

08. தழுபொத்த பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 49 வயதுடைய பெண் ஒருவர், மினுவங்கொட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 02 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

09. மொரட்டுவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்க மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே மாதம் 03 திகதி அன்று உயிரிழந்துள்ளார். தீவிர கோவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

10. குருநாகல் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய ஆண் ஒருவர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 04 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா, உயர் குருதியழுத்தம், நீரிழிவு, நாட்பட்ட சிறுநீரக் நோய் மற்றும் மோசமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

11. வஸ்கடுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 03 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US