இறக்குமதிக்கான தடையை நீக்குவது தொடர்பில் இலங்கையின் உறுதிமொழி
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இறக்குமதியை தடைகளை தளர்த்துவதற்கான திட்டம் முன்வைக்கப்படும் என நாட்டின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியான ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
கடந்த 2020 ஆண்டில் நடைமுறைக்கு வந்த கட்டுப்பாடுகள் வேகமாக குறைந்து வந்த நிலையில் அந்நியச் செலாவணி கையிருப்பைத் தக்கவைக்கும் நடவடிக்கையாக இலங்கை இறக்குமதிகளை கட்டுப்படுத்தியுள்ளது.
இறக்குமதி கட்டுப்பாடு
இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதியன்று நடைபெற்ற இலங்கை - ஐரோப்பிய ஒன்றிய
கூட்டு ஆணைக்குழுவின் 25ஆவது அமர்வின் போது தற்போதைய பொருளாதார நிலைமைகளை
காரணியாகக் கொண்டு இறக்குமதி கட்டுப்பாடுகளில் இருந்து படிப்படியாக
வெளியேறுவதற்கான தனது விருப்பத்தை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது.
முன்னதாக இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து குறித்த வர்த்தக கொள்கைகளில் இருந்து விலகுமாறு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து இலங்கையை வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |