கொழும்பு நகரில் கோவிட் தொற்றின் நிலை: மருத்துவர் வெளியிட்ட தகவல்
கொழும்பு நகரில் மற்றொரு பெரிய கோவிட் தொற்றுக்கான ஆபத்து இல்லை என்று கொழும்பு மாநகர சபையின் (CMC) பிரதம மருத்துவ அதிகாரி மருத்துவர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
"கொழும்பு நகரத்திற்குள் தொற்றுநோய் மீண்டும் வருவதற்கான பெரிய ஆபத்து எதுவும் இல்லை, குறிப்பாக ஓமிக்ரான் தோன்றிய பின்னர், பெருந்தொகையான நகர மக்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்" என்று மருத்துவர் விஜயமுனி கூறியுள்ளார்.
ஆபத்தான சூழ்நிலை

"தொற்று நோய் மருத்துவமனையிலிருந்து (IDH) நிலைமை குறித்த புதுப்பிப்பு வந்துள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களில் ஒவ்வொரு 50 வயதானவர்களில் ஒருவருக்கு தொற்று இருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும், இது, ஆபத்தான சூழ்நிலையிலிருந்து வெகு தொலைவில் உள்ள நிலைமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், சுகாதார அமைச்சக தரப்புக்களின்படி, கடந்த வாரம் சுமார் 150 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
 அதேநேரம், மட்டுப்படுத்தப்பட்ட
பரிசோதனையின்கீழ், நோயாளர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க முடியாது என சுகாதார
பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
    
    
    
    
    
    
    
    
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri