நாட்டில் தேங்காய் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
நாட்டில் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 21 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்கள் காரணமாகக் கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்ட தடங்கல்களுக்கு மத்தியிலும், இந்த வருமான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடல்வழிப் போக்குவரத்தில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்காக, மாற்று ஏற்றுமதி முறைகளை ஏற்றுமதியாளர்கள் கையாண்டமை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஏற்றுமதி வருமானம்
தேங்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கு வானூர்தி சரக்கு சேவைகளைப் பயன்படுத்துமாறு ஏற்றுமதியாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

இதன் மூலம் கடல்வழிப் போக்குவரத்துப் பாதிப்புகள் இருந்தபோதிலும், ஏற்றுமதி அளவைச் சீராகப் பேண முடிந்ததாகத் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்தார்.
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri