திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் இடம்பெற்ற அணிவகுப்பை மதிப்பாய்வு செய்த இந்திய கடற்படைத் தளபதி
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், திருகோணமலையில் உள்ள அந்த நாட்டின் கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற கடற்படைக் கல்லூரி அணிவகுப்பில் இந்திய கடற்படைத் தலைவர் ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் கலந்து கொண்ட நிகழ்வாக இது அமைந்திருந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக கடற்படைத் தளபதியின் வருகை கருதப்படுகிறது.
இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பு
அத்துடன் இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான, இந்தியாவின் முயற்சிகளில் ஒரு புதிய அத்தியாயத்தை, இது கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சென்றிருந்த இந்திய கடற்படைத் தளபதி, இலங்கைக்கு இந்தியா வழங்கிய டோர்னியர் விமானத்தின் செற்பாட்டுக் குழுவுடன் உரையாடினார்.
இதேவேளை நேற்றுடன் தமது இலங்கை பயணத்தை முடித்து கொண்ட இந்திய கடற்படை தளபதி,
இலங்கையின் ஜனாதிபதியையும் சந்தித்து, கடல்சார் ஒத்துழைப்பை மேலும்
வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.










