சாரதிக்கு ஏற்பட்ட சுகயீனம் - பலரின் உயிரை காப்பாற்றிய பேருந்து நடத்துனர்
வெல்லவாய தனமல்வில பிரதான வீதியின் கித்துல்கொட்டே பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுநாயக்கவில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த இந்த பேருந்தின் சாரதி திடீர் சுகயீனமடைந்துள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
இதன் காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியில் வேகமாக முன்னோக்கி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
உடனடியாகச் செயல்பட்ட பேருந்தின் நடத்துனர் பேருந்தின் பிரேக்கைப் அழுத்தி வேகத்தைக் குறைத்து சமாளித்துள்ளார்.
விபத்து நேரிட்ட போது, பேருந்தில் ஏராளமானோர் இருந்த போதிலும் எவருக்கும் காயம் ஏற்படாத வகையில் நடத்துனர் செயற்பட்டுள்ளார்.
பேருந்தின் சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.