அதிகரித்துள்ள வாகன இறக்குமதிகள் : ஜனாதிபதி சபையில் அறிவிப்பு
2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் 1.6 பில்லியன் டொலர்களாக இருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 1.5 பில்லியன் டொலர் மதிப்பிலான கடன் பத்திரங்கள் (LCs) திறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுகளை இன்று(12.11.2026) நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
5 பில்லியன் டொலர் கடன் சுமை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு ஆண்டுகளில், வாகன இறக்குமதிகள் 3 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருந்துள்ளன.
இதனுடன் எரிபொருள் இறக்குமதிக்கான கூடுதல் செலவான 2 பில்லியன் டொலரையும் சேர்த்தால், நாடு 5 பில்லியன் டொலருக்கும் அதிகமான கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இருப்பினும், இத்தகைய செலவுகள் இருந்தபோதிலும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 7 பில்லியன் டொலருக்கும் அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் மகிழ்ச்சியான நகரங்களின் தரவரிசை: வீடுகளின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு News Lankasri
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri