கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்! ரணிலுடன் பேரம் பேசும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலர்
"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலர் தொடர்ச்சியாகப் பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எப்போது அவருடன் இணைந்துகொள்வார்கள் என்பதை உறுதியாகக் கூற முடியாது" என நிதி இராஜாங்க அமைச்சர் ஷேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
வரவு - செலவுத் திட்டம்
"வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குவது, அமைச்சுப் பதவிகளைப் பெறுவது போன்ற பல விடயங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் எப்போது இணைவார்கள் என்று உறுதியாகக் கூற முடியாது.
பேச்சுக்களில் ஈடுபடும் அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் என்றும்
சொல்ல முடியாது" என்றார்.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
