பாணை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பதுளையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் 1793 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை மஹியங்கனை வீதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து அவை விநியோகம் செய்யப்படுவதாகவும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனடிப்படையில் மாறுவேடத்தில் அதிகாரி ஒருவரை நியமித்து இந்த மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்த மருந்தகம் ஒன்று அவசரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது 1705 போதை மாத்திரைகளும் பாணில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 88 போதை மாத்திரைகளும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளை பதுளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மருந்தகத்தின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதுளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.