இலங்கைத் தமிழரான பி.பி.சீ ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா காலமானார்

British Broadcasting Corporation Journalists In Sri Lanka Death
By Kamal Jul 24, 2023 05:50 PM GMT
Report

இலங்கைத் தமிழரான பி.பி.சீ சர்வதேச செய்தி சேவையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா தனது 67வது வயதில் காலமானார்.

இவர் பி.பி.சீ செய்தி சேவையின் ஆறு மணிச் செய்திகளை கடந்த 2007ம் ஆண்டு முதல் வாசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடந்த காலங்களில் நிலவிய பதற்றமான சூழ்நிலையின் காரணமாக போதியளவு பாதுகாப்பு இல்லை எனக் கருதிய ஜோர்ஜ் அழகையாவின் பெற்றோர் ஆபிரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்.

ஊடகத்துறை விருதுகள்

இலங்கைத் தமிழரான பி.பி.சீ ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா காலமானார் | Sri Lanka Born Bbc Journalist George Alagiah Dies

கடந்த 20 ஆண்டுகளாக பிபிசி செய்திகளை வழங்கிவந்த இவர் ருவாண்டா முதல் ஈராக் வரையிலான நாடுகளில் வன்முறைகள் கோலோச்சிய காலத்தில் அந்தந்த நாடுகளில் இருந்து துணிகரமான ஊடக பணியயை செய்திருந்தார். இதற்காக அவருக்கு விருதுகளும் வழங்கப்பட்டிருந்தது.

நெல்சன் மண்டேலா, டெஸ்மன் டுடு, ரொபர்ட் முகாபே போன்ற பிரபலங்களை ஜோர்ஜ் அழகையா நேர்காணல் செய்துள்ளார்.

1994 இல் ஈராக்கின் குர்துகளுக்கு எதிரான சதாம் குசைனின் இனப்படுகொலையை வெளிப்படுத்தியதில் இவரது ஊடகப்பணி முக்கியானது.

புருண்டியில் நடந்த உள்நாட்டுப் போரைப் பற்றி அறிக்கை செய்ததற்காக 1994 ஆம் ஆண்டில் மன்னிப்புச் சபையால் ஆண்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் அவர் பெயரிடப்பட்டார்.

மேலும் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை குறித்து அறிக்கை செய்த முதலாவது பிபிசி ஊடகரும் இவர் தான்.

தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா, பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னான் உள்ளிட்ட பிரமுகர்களையும் இவர் செவ்வி கண்டிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இந்த நோயுடன் போராடி இன்று அமைதியான மரணமடைந்தாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

ஜோர்ஜ் அழகையாவின் மரண செய்தியைக் கேட்டு அனைவரும் நம்பமுடியாத அளவிற்கு வருத்தமாக உள்ளதாக பிபிசி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஜோர்ஜ் அழகையா ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதை விட, அவரது இரக்கம், பச்சாதாபம் மற்றும் அற்புதமான மனிதாபிமானத்தால் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்.” என பிபிசி குறிப்பிட்டுள்ளது.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US