2019 இல் இலங்கையில் சாதனைப்படைத்த கர்ப்பிணிகள்: எனினும் பின்தொடர்ந்த சோகங்கள்
இலங்கையில் 2019ஆம் ஆண்டில் மொத்தம் 341,745 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்யப்பட்டனர் இதன் விளைவாக 319,010 நேரடி குழந்தை பிறப்புகள் நிகழ்ந்துள்ளன.
இருப்பினும், புதிதாகப் பிறந்த அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கவில்லை என்று இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 1,600 குழந்தைகள் 28 வாரங்களுக்குப் பின்னர் கருப்பையிலேயே இறந்தன.பிறந்த குழந்தைகளில் 35வீதமானவை பிறவி குறைபாடுகள் மற்றும் பிற கரு கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தன என்று மருத்துவ ஆலோசகர் சமூக மருத்துவர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பிறப்பு விகிதம்
இலங்கையில் பிறப்பு விகிதங்களில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. 2019 இல் 319,000 இல் இருந்து 2023 இல் 247,900 ஆக குழந்தைப் பிறப்பு குறைந்துள்ளது.
இதில் சுமார் 2,700 குழந்தைகள் தங்கள் முதல் பிறந்த நாள் வரையில் உயிர்வாழவில்லை.
பிறந்தவுடனேயே முதல் நாளில் 453 குழந்தைகள் இறந்தன, 951 குழந்தைகள் 2 முதல் 7 நாட்களுக்குள் இறந்தன, 527 குழந்தைகள் 8 முதல் 28 நாட்களுக்குள் இறந்தன.
அதிகபட்சமாக 855 குழந்தைகள் 28 நாட்களுக்குள் இறந்தன என்றும் மருத்துவர் ஜயரட்ன குறிப்பிட்டுள்ளார்.
பிறவிக் குறைபாடுகள்
மொத்தத்தில், ஒவ்வொரு ஆண்டும் 4,000 முதல் 5,000 குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கின்றன, அதே நேரத்தில் 900 முதல் 1,000 குழந்தைகள் ஒரு வயதுக்கு முன்பே இறக்கின்றன.
இதற்கிடையில், கருச்சிதைவுகளுக்கு, மரபணு பிரச்சினைகள், இரசாயனங்கள் மற்றும் கதிர்வீச்சு போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் மருத்துவ நிலைமைகள் ஆகியவை காரணமாக அமைந்துள்ளன என்றும் மருத்துவ ஆலோசகர் சமூக மருத்துவர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)