வரவும் செலவும் இல்லாத நாடாக மாறியுள்ள இலங்கை-வஜிர அபேவர்தன
இலங்கை தற்போது வரவும் இல்லாத செலவும் இல்லாத நாடாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பேலியகொடை வித்தியாலங்கார விகாரையின் விகாராதிபதியும் சபரகமுவை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கும்புறுகமுவே வஜிர தேரரை விகாரையில் சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உலகத்திற்கு மத்தியில் கீழ் நோக்கி தள்ளப்பட்டுள்ள இலங்கை
உலகத்திற்கு மத்தியில் இலங்கை மிகவும் கீழ் நோக்கி தள்ளப்பட்டுளளது. நாடு காணப்படும் நிலைமையில் இருந்து மீட்டெடுக்கவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்முறை வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்துள்ளார்.
வங்குரோத்து அடைந்த நாடு என்று உலகத்திற்கு மத்தியில் குத்தப்பட்டுள்ள முத்திரையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதே ஜனதிபதியின் ஒரே நோக்கம் எனவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
May you like this Video