அமெரிக்காவில் நடந்த இலங்கை அழகிப்போட்டியில் அடிதடி
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடத்தப்பட்ட மிஸ் ஸ்ரீலங்கன் நியூயோர்க் அழகிப்போட்டியின் இடையில் மோதல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகியாக ஏஞ்சலியா குணசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் இந்த போட்டியின் பின்னர் நடந்த விருந்துக்கு பிறகு இருத்தரப்புக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
அந்த மோதலுக்கான காரணங்கள் வெளியாகவில்லை. ஆனால் வீடியோ காட்சிகளில் அமெரிக்காவில் உள்ள இலங்கையர்கள் மற்றும் அமெரிக்கர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
சவுத் பீச்சில் உள்ள வோண்டர்பில்ட்டில் நடைபெற்ற போட்டியில், ஏஞ்சலியா குணசேகர முதன்முறையாக மிஸ் ஸ்ரீலங்கா நியூயார்க்கில் பட்டம் வென்றார்.
துடிப்பான இலங்கை சமூகம் இருக்கும் ஸ்டேட்டன் தீவில் நிகழ்வை நடத்த குழு முடிவு செய்தது.
முதன்முறையாக நடைபெற்ற மிஸ் ஸ்ரீலங்கா நியூயார்க் அழகிப் போட்டியில் 14 போட்டியாளர்களுக்கு ஆதரவாக 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் திரட்டப்படும் நிதியானது இலங்கையின் தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ளதாகவும், அது தற்போது உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் போராடிக்கொண்டிருக்கும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.