இலங்கை - பங்களாதேஷ் போட்டித் தொடர் நடைபெறும்
இலங்கை – பங்களாதேஷ் கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இலங்கை அணி வீரர்களுக்கு நடாத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் போது வேகப்பந்து வீச்சாளர்களான இசுறு உதான, ஷிரான் பெர்னாண்டோ மற்றும் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதியாகியிருந்தது.
எனினும் இன்றைய தினம் காலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது சமிந்த வாஸ் மற்றும் இசுறு உதான ஆகியோருக்கு தொற்று உறுதியில்லை என பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.
ஷிரான் பெர்னாண்டோவிற்கு இன்றைய தினம் நடாத்தப்பட்ட பரிசோதனையிலும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி, பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டித் தொடர் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.