நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைக்கட்டுகள் உடைந்து விழும் அபாயம்
அடை மழையுடனாக காலநிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைக்கட்டுகள் உடைந்து விழும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக புவி விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் அதுல சேனாரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஒருவர் மரணம்
இதேவேளை குளியாபிட்டிய சப்பாத்து பாலத்தில் பயணித்த ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். வேனில் வந்த குறித்த நபர் பாலத்தின் ஊடாக வேனை செலுத்துவதற்கு முன்னர் நீர்மட்டத்தை பரிசோதிக்க சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகரித்த மழைவீழ்ச்சி
மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை செய்யும் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan
