மீண்டும் ஆபத்தான கட்டத்தில் இலங்கை - சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதும் அவதானமிக்கதுமென சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் எவ்வித நிகழ்வுகளிலும் ஒன்றுக்கூட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டிற்கு முன்னர் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஒன்று காணப்பட்டது. எனினும் புத்தாண்டின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புத்தாண்டிற்கு முன்னர் குருணாகல் பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் கொரோனா கொத்தணி ஒன்று ஏற்பட்டது.
இதுவரையில் அந்த கொத்தணியுடன் தொடர்புடையவர்களை தேடி பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது. கொழும்பு வர்த்தக வங்கி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டவர்களால் ரத்கம பிரதேத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புத்தாண்டு காலப்பகுதியில் மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாமையினால் இதுவரையில் அவதானமிக்க நிலைமை ஏற்பட்டுள்ளளது. பல்கலைக்கழகங்களின் இறுதி மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கற்கைகளை ஆரம்பிப்பதற்கு இதுவரையில் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அயல் நாடான இந்தியா ஆபத்தான நிலைமைக்குள்ளாகியுள்ளது.
ஆபத்தை தவிர்க்க மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.
புதிய வைரஸ் மரபணு தொடர்பில் இதுவரையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
